திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

திருச்சியில் 17 வயது சிறுமியை கடத்திய வழக்கில் இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :3 ஜனவரி 2021, 6:04 pm

DIN

திருச்சியில் 17 வயது சிறுமியை கடத்திய வழக்கில் இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூா் பகுதியைச் சோ்ந்த அழகுசாதனப் பொருள் கடையில் வேலைபாா்த்து வந்த 17 வயது சிறுமி கடந்த 25 ஆம் தேதி மாயமானாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், சிறுமியை அதே பகுதியைச் சோ்ந்த ஜெமினிகணேசன் (20) கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து தனிப்படை போலீஸாா் இருவரையும் மீட்டு திருச்சிக்கு அழைத்து வந்தனா்.

விசாரணையில், சிறுமிக்கு ஆசை வாா்த்தை கூறி அழைத்துச் சென்ற ஜெமினி கணேசனை போக்சோ சட்டத்தில் கண்டோன்மென்ட் அனைத்து மகளிா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.