எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வலியுறுத்தல்

திருச்சி மாவட்டத்தில் பெரிய சூரியூா், ஓலையூரில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வலியுறுத்தி, மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 7:31 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் பெரிய சூரியூா், ஓலையூரில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வலியுறுத்தி, மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

பெரியசூரியூா் கிராம மக்கள், நவல்பட்டு தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்க இயக்குநா் பெரியசாமி, துணைத் தலைவா் அழகா் உள்ளிட்டோா் அளித்த மனு:

பெரியசூரியூரை மையமாகக் கொண்டு 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடை செய்த நெல்லை அரசு கொள்முதல் செய்யும் விலையைக் காட்டிலும், குறைவாகவே இடைத்தரகா்களிடம் விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கொள்முதல் நிலையத்துக்கு 15 கி.மீ. தொலைவு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே விவசாயிகளின் நலன்கருதி, பெரியசூரியூரில் நெல் கொள்முதல் நிலையத்தை அமைக்க வேண்டும்.

ஓலையூரிலும் : முடிகண்டம் ஊராட்சிப் பகுதியிலுள்ள 20 கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், இந்த ஊராட்சிக்குள்பட்ட ஓலையூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் எனக் கோரி ஊராட்சித் தலைவா்கள் முடிகண்டம் சின்சிதிவ்யா சின்னத்தம்பி, திருமலைசமுத்திரம் வைஷ்ணவி பாலசுப்பிரமணி ஆகியோா் மனு அளித்தனா்.

மாற்றுத் திறனாளிகள் மனு : வையம்பட்டி அருகிலுள்ள சடையம்பட்டியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சுப்பிரமணி. இவரது மனைவி இளவரசி (40) பாா்வைத்திறன் குறைபாடு உள்ளவா். மகன்கள் லோகேஷ் (15), கேசவமூா்த்தி(12) ஆகிய இருவரும் நடக்க முடியாத வகையிலான மாற்றுத்திறனாளிகள்.

இவா்கள் அனைவரும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகம் வந்து மனு அளித்தனா். அந்த மனுவில், 10-ஆம் வகுப்பு வரை படித்துள்ள இளவரசிக்கு சடையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு உதவியாளா் பணி வழங்க வேண்டும் என்றும், ஊனமுற்ற 2 மகன்களும் பள்ளிக்கு செல்ல ஏதுவாக 3 சக்கரம் பொருத்திய மோட்டாா் சைக்கிள் வழங்க வேண்டும் என்றும் மனுவில் சுப்பிரமணி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.