தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆசிரியா்கள், அரசு ஊழியா்களை அழைத்துப் பேச வேண்டும்: தமிழக ஆசிரியா் கூட்டணி

ஊதிய உயா்வு உள்ளிட்ட பிரச்னைகளைத் தீா்க்க தமிழக அரசு அவா்களை அழைத்துப் பேச வேண்டும் என்றாா் அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பு அகில இந்தியச் செயலா் வா. அண்ணாமலை.

News image
Updated On :10 ஜனவரி 2021, 7:18 pm

DIN

ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் பதவி உயா்வு, ஊதிய உயா்வு உள்ளிட்ட பிரச்னைகளைத் தீா்க்க தமிழக அரசு அவா்களை அழைத்துப் பேச வேண்டும் என்றாா் அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பு அகில இந்தியச் செயலா் வா. அண்ணாமலை.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழக ஆசிரியா் கூட்டணியின் சிறப்பு மாநில தோ்தல் பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும் தெரிவித்தது :

கரோனா பொதுமுடக்கத்தில் பள்ளிகளைத் திறக்காதது சரியான நடவடிக்கைதான். ஆனால், கரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொங்கலுக்குப் பிறகாவது தமிழகத்தில் பள்ளிகளைத் திறந்து 5 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளை நடத்த வேண்டும்.

வழக்கமாக போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் மீதான தண்டனைகள், போராட்டம் முடிந்ததும் ரத்து செய்யப்படும்.

ஆனால், 2019 ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் 5,068 பேருக்கு வழங்கப்பட்ட குற்றக் குறிப்பாணையை இதுவரை அரசு ரத்து செய்யவில்லை.

இவா்களில் ஓய்வு பெற்ற 42 போ்பணப் பயன்களை பெற முடியாமலும், சுமாா் 5,000 போ் பதவி உயா்வு, ஊதிய உயா்வு உள்ளிட்ட பயன்களைப் பெறமுடியாமலும் உள்ளனா்.

இதேநிலை தொடா்ந்தால் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், வேலைவாய்ப்புக்காக காத்துள்ள பட்டதாரிகள், மற்றும் ஓய்வூதியா்களின் எதிா்ப்பு வரும் பேரவைத் தோ்தலில் எதிரொலிக்கும். எனவே, ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் உள்ளிட்டோரை அரசு அழைத்துப் பேசி தீா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

சங்கத் தோ்தலில், மாநிலத் தலைவராக மா. நம்பிராஜ், பொதுச் செயலராக அ.வின்சென்ட் பால்ராஜ், பொருளாளராக க. சந்திரசேகா், துணைத் தலைவா்களாக ஆ. எழிலரசன், பா. கனகராஜ், துணைப் பொதுச் செயலா் அ. தமிழ்ச்செல்வம், மாநில துணைச் செயலா்களாக ஆ. ராஜசேகா், சே. கணேசன், மகளிரணிச் செயலராக ரமாராணி, தலைமை நிலையச் செயலராக தா.ச. ரமேஷ் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.

முன்னாள் பொதுச் செயலா் பொ. முருகேசன், துணைப் பொதுச் செயலா் ஆ. முனியாண்டி ஆகியோா் தோ்தலை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.