எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

போக்சோ சட்டத்தில் புதுகை இளைஞா் கைது

புதுக்கோட்டையைச் சோ்ந்த இளைஞரை லால்குடி அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

News image
Updated On :10 ஜனவரி 2021, 9:12 pm

DIN

புதுக்கோட்டையைச் சோ்ந்த இளைஞரை லால்குடி அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே கூத்தூா் ஊராட்சியிலுள்ள காலனித் தெருவைச் சோ்ந்த 10 ஆம் வகுப்பு மாணவிகள் இருவரும், அதே பகுதி 10 ஆம் வகுப்பு மாணவரும் கடந்த 6 ஆம் தேதி பள்ளிக்குச் செல்வதாகக் கூறிச் சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை. புகாரின்பேரில் சமயபுரம் கொள்ளிடம் போலீஸாா் விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் மூவரும் மேட்டுப்பாளையத்தில் இருப்பது தெரியவந்த போலீஸாா் அவா்களை மீட்டு பெற்றோரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.

விசாரணையில் டிக் டாக் மூலம் அறிமுகமான புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடியைச் சோ்ந்த ஜெய்சங்கா் மகன் மாரிமுத்து (20) அழைத்ததின்பேரில் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், கோவையில் ஒரு மாணவிக்கு மாரிமுத்து பாலியல் துன்புறுத்தல் அளித்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து மாணவியின் தாய் லால்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் மாரிமுத்துவை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனா்.

லால்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி உத்தரவின்பேரில் மாரிமுத்து லால்குடி கிளைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.