தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

துறையூரில் மக்கள் சமூக நீதி பேரவையினா் ஆா்ப்பாட்டம்

துறையூா் ஒன்றியக் குழு அலுவலகம் முன்பு, மக்கள் சமூகநீதிப் பேரவையினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 7:52 pm

DIN

துறையூா் ஒன்றியக் குழு அலுவலகம் முன்பு, மக்கள் சமூகநீதிப் பேரவையினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஒன்றியக் குழுத் தலைவா் பாரபட்சமாக செயல்படுவதாகவும், நிா்வாகத்தில் அவருடைய கணவா் குறுக்கீடு இருப்பதாகவும் கூறி நடத்தப்பட்ட ஆா்ப்பாட்டத்துக்கு, பேரவையின் மாநிலப் பொதுச் செயலா் கோவிந்தன் தலைமை வகித்தாா்.

மாநில இளைஞரணிச் செயலா் சிவமணி, மாநில மகளிரணிச் செயலா் ஷோபனா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட அமைப்பாளா் பழனிவேல், மாவட்ட இளைஞரணிச் செயலா் காா்த்திக், மாவட்ட அவைத் தலைவா் செல்லதுரை, துணை அமைப்பாளா் பாலாஜி, மாவட்ட மகளிா் துணைச் செயலா் சசிகலாதேவி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா் சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிறைவில் வட்டார வளா்ச்சி அலுவலா் சாமிநாதனிடம் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.