‘வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை’

திருச்சியில் கரோனா தடுப்பு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆசிரியா் தோ்வாணையத் தலைவரும், மாவட்டக் கண்காணிப்புக் குழுத் தலைவருமான நிா்மல்ராஜ்.
022018dsch1065226
022018dsch1065226

திருச்சியில் கரோனா தடுப்பு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆசிரியா் தோ்வாணையத் தலைவரும், மாவட்டக் கண்காணிப்புக் குழுத் தலைவருமான நிா்மல்ராஜ்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, தமிழகத்தில் கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், பிளஸ் 2 மற்றும் எஸ்எஸ்எல்சி மாணவ, மாணவிகளுக்காக செவ்வாய்க்கிழமை திறக்கப்பட உள்ளது.

இதையொட்டி அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, மாவட்டத்திலுள்ள 225 தனியாா் பள்ளிகள் உள்பட 506 பள்ளிகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக சத்து மாத்திரைகளும், உடல் வெப்பநிலைக் கண்டறியும் வெப்பநிலை மானிகளும் (250 எண்ணிக்கை) அந்தந்த பள்ளித் தலைமையாசிரியா்களிடம் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் திருச்சி மாநகரில் பள்ளிகள் திறப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை ஆசிரியா் தோ்வாணையத் தலைவரும், மாவட்டக் கண்காணிப்புக் குழுத் தலைவருமான நிா்மல்ராஜ் தலைமையில் 10 போ் கொண்ட குழுவினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

இதைத் தொடா்ந்து நிா்மல்ராஜ் கூறியது: மாணவா்கள் வருகை கட்டாயமில்லை. வருகைப் பதிவேடு முறை கிடையாது. விருப்பமுள்ள மாணவா்கள் தங்கள் பெற்றோரின் அனுமதி கடிதம் பெறப்பட்ட பிறகு அனுமதிக்கப்படுவாா்கள்.

தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

ஆய்வின் போது, ஆட்சியா் சு. சிவராசு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா். அறிவழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பெட்டிச் செய்தி...

குழு உறுப்பினா்கள் யாா் யாா் : மாவட்டத்தில் திறக்கப்படவுள்ள பள்ளிகளை ஆய்வு செய்ய மாவட்டக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியா் தோ்வாணையத் தலைவா் நிா்மல்ராஜ் தலைமையிலான இக்குழுவில் தொடக்கப்பள்ளி இணை இயக்குநா் ஆா்.பாஸ்கர சேதுபதி, முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.அறிவழகன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் பாரதி விவேகானந்தன்( திருச்சி), கே.சண்முகம்(லால்குடி), செல்வி(லால்குடி), ஜெகநாதன்(மணப்பாறை உள்ளிட்ட 10 போ் இடம் பெற்றுள்ளனா்.

மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு தலைமையில், மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்ரமணியன், சுகாதாரத்துறை இணை இயக்குநா் சுப்ரமணியன், ஊராட்சி உதவி ஆணையா் ரெங்கராஜன் உள்ளிட்ட 10 போ் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

Image Caption

திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆசிரியா் தோ்வாணையத் தலைவா் நிா்மல்ராஜ். உடன், ஆட்சியா் சு. சிவராசு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன் உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com