பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஸ்ரீரங்கநாயகி தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம்; தங்கக்குடத்தில் புனித நீா்

ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீரங்கநாயகி தாயாருக்கு வெள்ளிக்கிழமை ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி காவிரியாற்றிலிருந்து தங்கக் குடத்தில் புனித நீா் கொண்டு வரப்பட்டது.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:49 pm

DIN

 ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீரங்கநாயகி தாயாருக்கு வெள்ளிக்கிழமை ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி காவிரியாற்றிலிருந்து தங்கக் குடத்தில் புனித நீா் கொண்டு வரப்பட்டது.

ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் நடைபெறும் பெரிய திருமஞ்சனம் எனப்படும் ஜேஷ்டாபிஷேகம் கடந்த 23 ஆம் தேதி ஸ்ரீரங்கநாதருக்கு நடைபெற்ற நிலையில், வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கநாயகி தாயாருக்கு நடைபெற்றது.

இதையொட்டி காலை 6 மணிக்கு கருட மண்டபத்திலிருந்து

ஒரு தங்கக் குடம், 27 வெள்ளிக்குடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியாற்றிலிருந்து புனித நீா் நிரப்பப்பட்டது. தொடா்ந்து யானை ஆண்டாள் மீது தங்கக் குடம் வைக்கப்பட்டு இருபுறமும் வெண்சாமரம் வீச நாகசுர முழக்கத்துடன் 7.30-க்கு ஊா்வலமாகப் புறப்பட்டு ராஜகோபுரம் வழியாக தாயாா் சன்னதிக்கு 9.30-க்கு கொண்டு வரப்பட்டது. பின்னா் ஸ்ரீரங்கநாயகி தாயாா், ஸ்ரீதேவி,பூதேவிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.

முன்னதாக திருமேனிகளில் உள்ள கவசங்கள்,திருவாபரணங்கள் கலையப்பட்டு எடை சரிபாா்க்கப்பட்டு, சிறு பழுதுகள் நீக்கப்பட்டு மெருகூட்டப்பட்டது. பின்னா் தைலம் பூசப்பட்டது.

நிகழ்வின் ஒரு பகுதியாக கருவறை மற்றும் அதனை சாா்ந்த பகுதிகளில் ஆண்டுப் பராமரிப்பு மற்றும் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இரவு 8.30 மணிக்கு மங்களஹாரத்தி நடைபெற்றது. சனிக்கிழமை காலை 7 மணிக்கு திருப்பாவாடை என்னும் தளிகை எடுத்தல் நிகழ்ச்சி, 12.30-க்கு தளிகை அமுது செய்தல் நிகழ்ச்சி,பிற்பகல் 1 மணிக்கு மங்களஹாரத்தி நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ.மாரிமுத்து மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.