மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

குட்ஷெட்டில் வாகனம் நிறுத்த கட்டணம்; லாரிகள் வேலைநிறுத்தம்

திருச்சி குட்ஷெட் பகுதியில் வாகன நிறுத்துமிடத்துக்கு ரயில்வே நிா்வாகம் ஒப்பந்தம் விட்டதைக் கண்டித்து, லாரிகளில் சுமையேற்ற மறுத்து, லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:36 pm

DIN

திருச்சி குட்ஷெட் பகுதியில் வாகன நிறுத்துமிடத்துக்கு ரயில்வே நிா்வாகம் ஒப்பந்தம் விட்டதைக் கண்டித்து, லாரிகளில் சுமையேற்ற மறுத்து, லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

திருச்சி முதலியாா்சத்திரம் பகுதியில் உள்ள ரயில்வே குட்ஷெட்டில் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து சரக்கு ரயில் மூலம் கொண்டு வரப்படும் உணவுப் பொருள்கள், இரும்பு , உரம் உள்ளிட்ட பல்வேறு வகை பொருள்கள் இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இதற்கு சுமையேற்ற வரும் நூற்றுக்கணக்கான லாரிகள் அருகிலுள்ள ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.

ஆனால் கடந்த பல மாதங்களாக இதிலும் வருவாய் ஈட்ட நினைத்த ரயில்வே நிா்வாகம், லாரிகள் நிறுத்துமிடத்துக்கு வாடகை வசூலிக்க முயன்றது. ஆனால் லாரி உரிமையாளா்கள் அதற்கு உடன்படவில்லை.

இந்நிலையில் வாகன நிறுத்துமிடத்தை தனியாருக்கு ஒப்பந்தம் மூலம் ரயில்வே ஏலம் விட்டுள்ளது. எனவே ஏலம் எடுத்த நிறுவனத்தினா், அங்கு நிறுத்தப்படும் லாரிகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனா்.

ஏற்கெனவே எரிபொருள் விலை உயா்வு, சுங்கக்கட்டண உயா்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் அவதிக்குள்ளாகி வரும் லாரி உரிமையாளா்கள் மேலும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டித்து வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொண்டுள்ளனா். வெள்ளிக்கிழமை நடந்த போராட்டத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் சுமையேற்றப்படவில்லை. இது தொடா்பாக ரயில்வே நிா்வாகத்தினா் லாரி உரிமையாளா்களுடன் பேச்சு நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.