மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருச்சியில் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு: ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் ஆர்வமுடன் சுவாமி தரிசனம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் இன்று திறக்கப்பட்டது.  

News image

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில்.

Updated On :5 ஜூலை 2021, 11:22 am

DIN

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் இன்று திறக்கப்பட்டது. 
தமிழகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 10 ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வழிபாட்டுத் தலங்களில் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,நோய்த் தொற்று குறையத் தொடங்கியதைத் தொடா்ந்து பொதுமுடக்கத்தில் அளிக்கப்பட்டுள்ள தளா்வுகளின் அடிப்படையில் வழிபாட்டுத் தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. 

Story image
Story image
Story image

இதைத்தொடா்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இன்று திறக்கப்பட்டன. திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்பே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

ஏற்கெனவே, கோயில் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தனர். முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

Story image
Story image
Story image
Story image

இதேபோல் கரோனா பொது முடக்கம் தளர்வையொட்டி திருச்சியில் 71 நாள்களுக்கு பிறகு திங்கள்கிழமை திறக்கப்பட்ட நத்ஹர்வலி தர்காவில் இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்தனர்.

Story image
Story image

மேலும் பாலக்கரை உலகப்போர் பசிலிக்கா தேவாலயமும் இன்று திறக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.