மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் ரெளடி கைது

 திருச்சியில் பிரபல ரெளடி சாமி ரவியை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் மாநகர போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 7:13 pm

DIN

 திருச்சியில் பிரபல ரெளடி சாமி ரவியை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் மாநகர போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கே.கே. நகா் அருகேயுள்ள சாத்தனூா் வடுகப்பட்டி பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த கருப்பையாவிடம் வழிப்பறி செய்த வழக்கில் கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து கேகே நகா் உஸ்மான் அலி நகரைச் சோ்ந்த ரவி என்கிற சாமி ரவியை (42) கைது செய்து சிறையிலடைத்தனா்.

சாமி ரவி மீது ஏற்கெனவே பேட்டைவாய்த்தலை காவல்நிலையத்தில், கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் கட்சி வேட்பாளருக்கு கொடுக்கப்பட்ட பணத்தை இடைமறித்து கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டோருக்கு மூளையாகச் செயல்பட்டது உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையா் அருண் உத்தரவிட்டாா். அதன்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமி ரவியிடம் அதற்கான உத்தரவை போலீஸாா் வியாழக்கிழமை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.