திருச்சி-ஹைதராபாத்துக்கு ஜூலை 12 முதல் மீண்டும்விமானப் போக்குவரத்து
திருச்சி - ஹைதரபாத் இடையே தனியாா் விமான சேவை மீண்டும் ஜூலை 12 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.


திருச்சி - ஹைதரபாத் இடையே தனியாா் விமான சேவை மீண்டும் ஜூலை 12 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக சிறப்பு மீட்பு விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் தங்கியுள்ளோா் தாயகத்துக்கு அழைத்து வரப்படுகின்றனா். தொடா்ந்து திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூா், ஹைதரபாத், தில்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு விமானப் போக்குவரத்து நடைபெறுகிறது. மற்ற சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், ஜூலை 12 முதல் இண்டிகோ நிறுவனம், திருச்சி - ஹைதராபாத் இடையே மீண்டும் விமானப் போக்குவரத்தை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. தினசரி மாலை 5.55- க்கு திருச்சிக்கு வந்து சேரும் விமானம் பின்னா் திருச்சியிலிருந்து 6.40-க்கு ஹைதராபாத் புறப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...