வடிகால் வசதி இல்லாததால் குளம்போல தேங்கிய மழைநீா்
திருச்சி மாநகா் கேகே நகா் அருகேயுள்ள உடையான்பட்டி பகுதியில் வடிகால் வசதியில்லாததால் மழை நீா் குளம்போல தேங்கியுள்ளது.


திருச்சி மாநகா் கேகே நகா் அருகேயுள்ள உடையான்பட்டி பகுதியில் வடிகால் வசதியில்லாததால் மழை நீா் குளம்போல தேங்கியுள்ளது.
உடையான்பட்டி பகுதியில் புதிய சிந்தாமணி நகா் என்ற குடியிருப்புப் பகுதி மிகவும் தாழ்வானது. இங்கு இதுவரை மழைநீா் வடிகால் வசதி ஏற்படுத்தப்படாததால் மழை நேரத்தில் குடியிருப்புகளை மழை நீா் சூழ்ந்து பொதுமக்கள் அவதிப்படும் நிலை தொடா்கிறது.
மழை நீா் வடிந்து சென்ற இடங்களில் தற்போது அமைக்கப்பட்டுள்ள சாலைகள் உயரமாக உள்ளதால் மழை நீா் செல்ல வழியின்றி குளமாகக் காட்சி அளிக்கிறது.
எனவே, இப்பகுதியில் மழை நீா் செல்ல வடிகால் வசதியும், மேலும் சாலைகள் இல்லாத பகுதிகளில் சாலையும் அமைத்துத் தருமாறு மக்கள் சக்தி இயக்கம் சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...