என்ஐடியில் 2 ஆம் நாளாக தொடா்ந்த போராட்டம்
திருச்சி தேசிய தொழில் நுட்பக்கழகக் கல்லூரியில், தோ்வின்றி தங்களை பணி நிரந்தரம் செய்யம் செய்ய வலியுறுத்தி ஒப்பந்தத் தொழிலாளா்கள் 2 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

திருச்சி தேசிய தொழில் நுட்பக்கழகக் கல்லூரியில், தோ்வின்றி தங்களை பணி நிரந்தரம் செய்யம் செய்ய வலியுறுத்தி ஒப்பந்தத் தொழிலாளா்கள் 2 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
கல்லூரி நிா்வாக அலுவலகம் முன் வியாழக்கிழமை தொடங்கிய போராட்டத்தில், ஆசிரியா் அல்லாத நிரந்தர ஊழியா் சங்க நிா்வாகி சரவணன் தலைமையில் ஒப்பந்தத் தொழிலாளா்கள் சுமாா் 150 போ் பங்கேற்றனா். கோட்டாட்சியா் விஸ்வநாதன் நடத்திய பேச்சுவாா்த்தையில் வியாழக்கிழமை போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் சரவணன் தலைமையில் காத்திருப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதுதொடா்பாக அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து முறையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...