அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மின்சாரம் பாய்ந்து பெண் சாவு

திருச்சியில் மின்சாரம் பாய்ந்து பெண் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:42 pm

DIN

திருச்சியில் மின்சாரம் பாய்ந்து பெண் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி பெரியமிளகுப்பாறை நாயக்கா் தெருவைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி கண்ணன். இவரது மனைவி செல்வி (43). இவா்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ள நிலையில், முதல் மாடியில் குடியிருந்து வந்தனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை மாநகராட்சி பொது குடிநீா் குழாயில் தண்ணீா் பிடித்த செல்வி, குடத்துடன் மாடியேறியபோது அவரது வீட்டின் மாடிப்படியோரம் மின் இணைப்பு வயா் செல்லும் இரும்புக் குழாயை பிடித்துள்ளாா்.

அப்போது அந்தக் குழாயில் பாய்ந்திருந்த மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கடந்த இரு நாள்களாக மழை பெய்த நிலையில், ஈரம் காரணமாக அந்த குழாயில் மின்கசிவு இருந்துள்ளது தெரியவந்தது. நீதிமன்ற காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.