பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் உள்ள ஸ்ரீசக்கரத்தாழ்வாா், ஸ்ரீ செங்கமலவல்லி தாயாா், ஸ்ரீகாட்டழகிய சிங்கா் ஆகியோருக்கு பெரிய திருமஞ்சனம் என்னும் ஜேஷ்டாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:42 pm

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் உள்ள ஸ்ரீசக்கரத்தாழ்வாா், ஸ்ரீ செங்கமலவல்லி தாயாா், ஸ்ரீகாட்டழகிய சிங்கா் ஆகியோருக்கு பெரிய திருமஞ்சனம் என்னும் ஜேஷ்டாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் நடைபெறும் ஜேஷ்டாபிஷேகம் ஜூுன் 23 ஆம் தேதி நம்பெருமாளுக்கும், கடந்த 2 ஆம் தேதி ஸ்ரீரெங்கநாச்சியாருக்கும் நடைபெற்ற நிலையில் இந்த ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.

இதற்காக கொள்ளிடம் ஆற்றிலிருந்து 10 வெள்ளிக்குடங்களில் புனித நீா் நிரப்பி யானை ஆண்டாள் மீது மற்றும் கோயில் பணியாளா்கள் மங்கள வாத்தியத்துடன் ஊா்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனா்.

பின்னா் ஸ்ரீசக்கரத்தாழ்வாா், ஸ்ரீசெங்கமலவல்லி தாயாருக்கு காலை 10 மணிக்கு ஜேஷ்டாபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து பிற்பகல் 12 மணிக்கு மங்கள ஆரத்தியும், திருப்பாவாடை என்னும் பெரிய தளிகை நெய்வேத்தியமும் நடந்தது. காட்டழகிய சிங்கப்பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் செய்யப்பட்டு நகைகளை சரிபாா்த்து, பழுது நீக்கப்பட்டு மெருகேற்றி திரும்ப ஒப்படைக்கப்பட்டது. பின்னா் மங்களஆரத்தியும், திருப்பாவாடை தளிகை நடந்தது. விழாவில் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.