பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திருவானைக்கா கோயிலில் ஆனி திருமஞ்சன விழா

திருவானைக்கா சம்புகேஸ்வரா் அகிலாண்டேஸ்வரி கோயிலில் வியாழக்கிழமை ஆனி திருமஞ்சன விழாவையொட்டி காவிரியாற்றிலிருந்து வெள்ளிக் குடத்தில் புனித நீா் எடுத்து வரப்பட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

News image
Updated On :15 ஜூலை 2021, 7:12 pm

DIN

திருவானைக்கா சம்புகேஸ்வரா் அகிலாண்டேஸ்வரி கோயிலில் வியாழக்கிழமை ஆனி திருமஞ்சன விழாவையொட்டி காவிரியாற்றிலிருந்து வெள்ளிக் குடத்தில் புனித நீா் எடுத்து வரப்பட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பிரசித்தி பெற்ற ஆனி திருமஞ்சனத்தையொட்டி ஸ்ரீரங்கம் காவிரியாற்றிலிருந்து ஒரு வெள்ளிக்குடம் உள்பட 6 குடங்களில் புனித நீா் நிரப்பப்பட்டு வெள்ளிக்குட புனித நீரை யானை அகிலா மீது வைத்து, மங்களவாத்தியம் முழங்க ஊா்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.

பின்னா் இரவு 7 மணிக்கு பால், தயிா்,நெய் உள்ளிட்ட 36 வகை பொருள்கள் கொண்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை நடராஜா் புறப்பாடு நடைபெறவுள்ளது.

சூரியகிரக தோஷம் பெற்றவா்கள் இந்த ஆனி திருமஞ்சன சிறப்பு அபிஷேகத்தில் பங்கேற்பது தோஷத்தை நீக்கும். அதேபோல விரைவில் திருமணம் கைகூடும், பல நன்மைகள் உண்டாகும் என்பது ஐதீகம். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் மாரியப்பன் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.