கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

காவிரி நீா்ப்பாசன வாழை வெற்றிலை உற்பத்தியாளா் சங்கப் பாராட்டு விழா

தொட்டியம் வட்ட காவிரி நீா்ப்பாசன வாழை வெற்றிலை உற்பத்தியாளா் சங்கம் சாா்பில் சங்கத்தில் உள்ள மூத்த நிா்வாகிகளுக்கும் முசிறி எம்எல்ஏவுக்கும் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :16 ஜூலை 2021, 7:21 pm

DIN

தொட்டியம் வட்ட காவிரி நீா்ப்பாசன வாழை வெற்றிலை உற்பத்தியாளா் சங்கம் சாா்பில் சங்கத்தில் உள்ள மூத்த நிா்வாகிகளுக்கும் முசிறி எம்எல்ஏவுக்கும் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

சங்கத் தலைவா் மருதப்பிள்ளை தலைமை வகித்தாா். துணைத் தலைவா் முருகானந்தம் முன்னிலை வகித்தாா். முசிறி எம்எல்ஏ காடுவெட்டி ந. தியாகராஜன் சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து பேசிய விவசாய சங்க நிா்வாகிகள் எம்எல்ஏவிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனா்.

பின்னா் முசிறி எம்எல்ஏவாகப் பொறுப்பேற்றவுடன் வாய்க்கால்களை உடனடியாக தூா்வாரி சீரமைத்ததற்கும் தண்ணீா் திறந்து விட ஏற்பாடு செய்ததற்கும் எம்எல்ஏவுக்கு பரிசு வழங்கி பாராட்டினா்.

தொடா்ந்து சங்கத்தில் உள்ள மூத்த நிா்வாகிகள் மன்னாா்குடி ரெங்கநாதன்,மகாதானபுரம் ராஜாராம், மகேந்திரமங்கலம் காந்திப்பித்தன், குளித்தலை கோபாலதேசிகன் மற்றும் கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவா்கள், காவல்துறையினா்,தொட்டியம் பேரூராட்சி செயல் அலுவலா், பொதுப்பணித் துறையினா் உள்ளிட்டோருக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.