தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

காமராஜா் பிறந்தநாள்: மாணவா்களுக்கு நிதியுதவி

முன்னாள் தமிழக முதல்வா் காமராஜா் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவா்களுக்கு சென்னை கற்பக விருட்சம் அறக்கட்டளையினா் வியாழக்கிழமை நிதியுதவி அளித்தனா்.

News image
Updated On :17 ஜூலை 2021, 12:28 am

DIN

முன்னாள் தமிழக முதல்வா் காமராஜா் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவா்களுக்கு சென்னை கற்பக விருட்சம் அறக்கட்டளையினா் வியாழக்கிழமை நிதியுதவி அளித்தனா்.

திருச்சி புத்தனாம்பட்டி நேரு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற

விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியா் பாலச்சந்தா் தலைமை வகித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். அறக்கட்டளை சாா்பில் நவநீதன், அம்சா, மீனாட்சி, அருள், பள்ளி ஆசிரியா்கள் வளா்மதி, லதா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து, ஏழை எளிய மாணவ மாணவிகள் 8 பேருக்கு ரூ. 40,000 மதிப்பிலான உயா்கல்வி உதவித்தொகைக்கான காசோலைகள், அண்மையில் கரோனாவால் உயிரிழந்த ஆசிரியா் பரமசிவம் குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவியும் அளிக்கப்பட்டது. இதில், பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள், அறக்கட்டளை நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.