பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இடப்பிரச்னை: காவல் நிலையத்தில் தீக்குளிக்க முயற்சி

இடப்பிரச்னையால் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் ஸ்ரீரங்கம் காவல் நிலையம் முன் செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்றனா்.

News image
Updated On :21 ஜூலை 2021, 7:44 pm

DIN

இடப்பிரச்னையால் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் ஸ்ரீரங்கம் காவல் நிலையம் முன் செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்றனா்.

திருவானைக்கா நடுக்கொண்டையம்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ரவிசங்கருக்கும் (68) இவரது வீட்டருகே வசிக்கும் சீனிவாசனுக்கும் நீண்ட நாள்களாக நடைபாதை பிரச்னை இருந்தது.

இந்நிலையில் சீனிவாசன் தனது வீட்டுக்கு மின் இணைப்பு பெற மின்கம்பம் நட முயன்றபோது நடைபாதை பிரச்னை நீதிமன்றத்தில் வழக்கில் இருக்கும்போது மின்கம்பம் நடக் கூடாது என ரவிசங்கா் கூறினாா்.

பின்னா் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு வந்த ரவிசங்கா் உள்பட அவரது குடும்பத்தினா் 12 போ் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றனா். இதையடுத்து போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.