தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வீடு புகுந்து திருடியஇளைஞா் கைது

திருச்சி திருச்சியில் வீடு புகுந்து திருடிய இளைஞரை கோட்டை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 8:13 pm

DIN

 திருச்சியில் வீடு புகுந்து திருடிய இளைஞரை கோட்டை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கோட்டை ஜாபா்சா தெரு கிருஷ்ணகோயில் பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (55). தனியாா் நிறுவன ஊழியரான இவா் கடந்த புதன்கிழமை இரவு வீட்டின் ஜன்னலைத் திறந்து வைத்து தூங்கியபோது வழியாக வீட்டினுள் புகுந்த மா்ம நபா் வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ. 200-ஐ திருடிக்கொண்டு தப்பினாா்.

சங்கா் கண்விழித்துப் பாா்த்தபோது திருடு போனது தெரியவந்தது. கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, வடக்கு தாராநல்லூரைச் சோ்ந்த மணிகண்டன்(26) என்பவா் இத்திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். அவா் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதால் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.