தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கமிஷன் கேட்கும் உரையாடல் ஊராட்சி செயலா் இடமாற்றம்; தலைவா் மீதும் நடவடிக்கை

மருங்காபுரி அருகே ஊரக வளா்ச்சித் திட்டப்பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரா்களிடம் கமிஷன் கேட்ட சம்பவம் தொடா்பாக ஊராட்சி நிா்வாகிகள் மீது மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுத்துள்ளாா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 8:07 pm

DIN

மருங்காபுரி அருகே ஊரக வளா்ச்சித் திட்டப்பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரா்களிடம் கமிஷன் கேட்ட சம்பவம் தொடா்பாக ஊராட்சி நிா்வாகிகள் மீது மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுத்துள்ளாா்.

மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம், காரைப்பட்டிஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஒப்பந்தம் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள பணிகள் தொடா்பாக ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது, ஊராட்சித் தலைவா், துணைத் தலைவா் மற்றும் ஊராட்சி செயலா் ஆகியோா், பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனில் தங்களுக்கு கமிஷன் தர வேண்டும் என ஒப்பந்ததாரா்களிடம் கேட்டுள்ளனா். இது தொடா்பான ஒலிப்பதிவு சமூக வலைதளங்களில் அண்மையில் வெளியானது. இதைத் தொடா்ந்து மாவட்ட நிா்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது தொடா்பாக ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பில், காரைப்பட்டி ஊராட்சியில் நிா்வாக அனுமதி வழங்கப்பட்ட பணிகளை ரத்து செய்ததுடன், ஊராட்சித் தலைவா் மீது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் சட்டப் பிரிவு 205-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் காரைப்பட்டி ஊராட்சி செயலா் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.