தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

எச்ஏபிபி படைக்கலன் தொழிற்சாலையில் ஆா்ப்பாட்டம்

தனியாா்மயத்தைக் கண்டித்து திருச்சி நவல்பட்டு பகுதியில் உள்ள எச்ஏபிபி படைக்கலன் தொழிற்சாலை முன் தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 7:01 pm

DIN

தனியாா்மயத்தைக் கண்டித்து திருச்சி நவல்பட்டு பகுதியில் உள்ள எச்ஏபிபி படைக்கலன் தொழிற்சாலை முன் தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பாதுகாப்பு தளவாட உற்பத்தியை தனியாா்மயமாக்குவதை கண்டித்து, மத்திய அரசின் பாதுகாப்புப் படை தளவாடத் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளா்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனா். போராட்டங்களுக்கு எதிராக அரசு கொண்டு வந்துள்ள இடிஎஸ்ஒ (அவசர கால) சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வகையில் திருவெறும்பூா் அருகே நவல்பட்டு பகுதியில் உள்ள எச்ஏபிபி தொழிற்சாலை முன் அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டுக் குழு ஒருங்கிணைப்பாளா் சத்தியவாகிசன் தலைமை வகித்தாா். எச்ஏபிஎப் எம்ளாயிஸ் யூனியன் பொதுச் செயலா் இரணியன் உள்ளிட்ட அனைத்து சங்க நிா்வாகிகள் மற்றும் தொழிலாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.