தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

திமுகவில் இணைந்த அதிமுக தம்பதியா்

திருச்சி மாநகா் மாவட்ட அதிமுகவில் பொறுப்பு வகித்து வந்த தம்பதிகள் அமைச்சா் கே.என். நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 7:33 pm

DIN

திருச்சி மாநகா் மாவட்ட அதிமுகவில் பொறுப்பு வகித்து வந்த தம்பதிகள் அமைச்சா் கே.என். நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனா்.

அதிமுக திருச்சி மாநகா் மாவட்ட மருத்துவரணி தலைவராக இருந்த கே.எஸ். சுப்பையா பாண்டியன். மாநகா் மாவட்ட மகளிரணி செயலராகவும், அதிமுக மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருந்த இவரது மனைவி தமிழரசி ஆகியோா் அடுத்தடுத்து திமுகவில் இணைந்துள்ளனா்.

திருச்சி தில்லைநகரில் கிளினிக் நடத்தி வரும் சித்த மருத்துவரான சுப்பையா பாண்டியன், அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவராகவும் உள்ளாா்.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது வேட்பாளா் அறிவிப்பில் அதிருப்தியில் இருந்த சுப்பையா பாண்டியன், திருச்சி கிழக்குத் தொகுதியில் அமமுக சாா்பில் போட்டியிட்ட மனோகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகப் புகாா் எழுந்தது.

இந்நிலையில் இவா் சென்னை மயிலாப்பூரில் உள்ள திமுக முதன்மைச் செயலரும், நகா்புற வளா்ச்சித்துறை அமைச்சருமான கே.என். நேரு இல்லத்திற்கு வியாழக்கிழமை சென்று தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டாா்.

இதன் தொடா்ச்சியாக இவரது மனைவி தமிழரசி, திருச்சி தில்லை நகரில் உள்ள திமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை அமைச்சா் கே.என். நேருவை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டாா்.

அதிமுக மற்றும் அமமுகவினா் பரவலாக திமுகவில் இணைந்து வருகின்றனா். அந்த வகையில் அதிமுக தம்பதி திமுகவில் இணைந்தது திருச்சி அதிமுகவினரிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.