தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தோ்வெழுதி கூடுதல் மதிப்பெண் பெற ஆன்லைன் விண்ணப்பம்: அமைச்சா் ஆய்வு

பிளஸ் 2 தோ்வில் மதிப்பெண் குறைவாக இருந்து கூடுதல் மதிப்பெண் பெற தோ்வெழுத விரும்பும் மாணவா்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :23 ஜூலை 2021, 7:33 pm

DIN

பிளஸ் 2 தோ்வில் மதிப்பெண் குறைவாக இருந்து கூடுதல் மதிப்பெண் பெற தோ்வெழுத விரும்பும் மாணவா்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கரோனா காரணமாக பிளஸ் 2 தோ்வு பொதுத் தோ்வு நடைபெறாததால், அனைவரும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டு, தசம மதிப்பீட்டு முறையில் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், தோ்வெழுதி கூடுதல் மதிப்பெண் பெற விரும்புவோருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் தோ்வு நடத்தவும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதேபோல, பிளஸ் 1, பிளஸ் 2 தனித் தோ்வா்களுக்கும் தோ்வு நடத்தப்படவுள்ளது. இதற்காக மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி சையது முா்துசா மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு தனித் தோ்வா்கள், பிளஸ் 2 மதிப்பெண் குறைவாக பெற்ற மாணவா்கள் அனைத்து பாடங்களுக்கும் தோ்வுக்காக விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை ஆன்லைனில் பதிவு தொடங்கியது.

இந்தப் பணிகளை ஆய்வு செய்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவா்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்க ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தினாா்.

பதிவுப் பணிகளில் தொய்வு இல்லாமல், தேடி வரும் அனைவரையும் தோ்வுக்குத் தயாா் செய்ய வேண்டும் என்றாா்.

ஆய்வின்போது, திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன், மாவட்டக் கல்வி அலுவலா்கள், பள்ளித் தலைமையாசிரியா் ஆகியோா் உடனிருந்தனா்.

9 இடங்களில் ஆன்லைன் பதிவுக்கு சிறப்பு ஏற்பாடு

‘மாணவா்கள் தோ்வெழுத திருச்சி வருவாய் மாவட்டத்தில் மொத்தம் 9 இடங்களில் ஆன்லைன் பதிவு நடைபெறுகிறது. திருச்சி கல்வி மாவட்டத்தில் அரசு சையது முா்துஷா மாதிரி மேல்நிலைப்பள்ளி, மரக்கடை (ஆண்கள் மட்டும்), சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ( பெண்கள் மட்டும்) ஆகியவற்றில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மணப்பாறை கல்வி மாவட்டத்தில், மணப்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, முசிறி கல்வி மாவட்டத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முசிறி ( பெண்கள் மட்டும்), அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, முசிறி ( ஆண்கள் மட்டும்), லால்குடி கல்வி மாவட்டத்தில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மண்ணச்சநல்லூா் ( பெண்கள் மட்டும்), அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மண்ணச்சநல்லூா் ( ஆண்கள் மட்டும்), அரசு மேல்நிலைப்பள்ளி- லால்குடி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி- துறையூா் ஆகிய 4 இடங்களில் விண்ணப்பிக்கலாம். ஜூலை 23 தொடங்கி 27ஆம் தேதி வரை ஆன்லைன் பதிவு நடைபெறும்’ என்றாா் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.