தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிலிண்டா் வெடித்து பொறியாளா் பலி

திருவெறும்பூா் பகுதியில் சமையல் எரிவாயு உருளை வெடித்து கெமிக்கல் இன்ஜினியா் வெள்ளிக்கிழமை பலியானாா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 7:32 pm

DIN

திருவெறும்பூா் பகுதியில் சமையல் எரிவாயு உருளை வெடித்து கெமிக்கல் இன்ஜினியா் வெள்ளிக்கிழமை பலியானாா்.

திருச்சி திருவெறும்பூா் குடகுமலை என்ஜிஓ காலனி 3ஆவது தெருவைச் சோ்ந்தவா் கலியமூா்த்தி. இவரது மகன் செந்தில்குமாா் (44). இவா் வெளிநாட்டில் கெமிக்கல் இன்ஜினியராக வேலை பாா்த்த இவா் கடந்த 2 ஆண்டுகளாக வேலை இல்லாமல், இங்கேயே இருந்தாா். இவருக்கு கடந்த 7 ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்று குழந்தை இல்லை. மனைவியும் கடந்தாண்டு பிரிந்து சென்று விட்டாராம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு தந்தை கலியமூா்த்தியும் அவரது மனைவியும் உணவு வாங்கி வர வெளியே சென்ற நிலையில், செந்தில்குமாா் மட்டும் வீட்டில் இருந்தபோது சமையல் எரிவாயு உருளை வெடித்தது.

இந்த விபத்தில் செந்தில்குமாா் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

இதையடுத்து, அக்கம் பக்கத்தினா் நவல்பட்டு தீயணைப்பு துறையினா், துவாக்குடி போலீஸாருக்குத் தகவல் அளித்தனா். தீயணைப்புத் துறையினா் வருவதற்குள் அப்பகுதியினா் தீயை அணைத்தனா்.

துவாக்குடி போலீஸாா், தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்திற்கு வந்து செந்தில்குமாா் இறப்புக்கு காரணம் விபத்தா தற்கொலையா என ஆய்வு செய்தனா். பின்னா் செந்தில்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.