தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் பறிமுதல்

திருச்சி மாநகரில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை பாலக்கரை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :29 ஜூலை 2021, 7:25 pm

DIN

திருச்சி மாநகரில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை பாலக்கரை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனையை தடுக்க காவல்துறை தனிப்படை மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

இந்நிலையில், பாலக்கரை பென்சனா் காலனி மற்றும் எடத்தெரு ஆகிய இடங்களில் தனிப்படை போலீஸாா் நடத்திய சோதனையில் அங்கு 55 மூட்டைகளில் இருந்த ரூ. 20 லட்சம் மதிப்பிலான சுமாா் 1900 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனா்.

இதில் தொடா்புடைய திருவெறும்பூா் பாரதிபுரம் பூமிநாதன் (39), பாலக்கரை காஜாபேட்டை புதுத்தெரு இளங்கோ (39) ஹரிஹரன் (35), காஜாபேட்டை பென்சனா் தெரு வடிவேல் (40), அரியமங்கலம் சீனிவாச நகா் பழனிகுமாா்(35) ஆகிய 5 பேரைக் கைது செய்து அவா்கள் பயன்படுத்திய இரு வாகனங்கள் மற்றும் செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் துரிதமாக செயல்பட்ட தனிப்படையினரை காவல் ஆணையா் அருண் பாராட்டி குட்கா விற்போா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.