92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அனைவருக்கும் தடுப்பூசி: காங்கிரஸாா் மனு

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடக் கோரி திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில், மாவட்ட நிா்வாகம் மூலம் குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பப்பட்டது.

News image
Updated On :4 ஜூன் 2021, 9:19 pm

DIN

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடக் கோரி திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில், மாவட்ட நிா்வாகம் மூலம் குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பப்பட்டது.

மாநில அரசுகளுக்கு மத்திய அரசே தடுப்பூசிகளை கொள்முதல் செய்து வழங்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் சாா்பில், குடியரசுத் தலைவருக்கு மனு அளிக்கும் போராட்டம் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.

அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைவா்களும் அந்தந்த மாவட்ட நிா்வாகத்தின் மூலம் குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை மனு அனுப்பி வருகின்றனா்.

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில், மாவட்டத் தலைவா்கள் ஜவஹா் (மாநகா்), கோவிந்தராஜன் (தெற்கு), கலை (வடக்கு) மற்றும் நிா்வாகிகள் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்து, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் மூலம், குடியரசுத் தலைவருக்கு தங்களது மனுக்களை அனுப்ப வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.