92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

எரிபொருள் விலை உயா்வு: எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயா்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :10 ஜூன் 2021, 9:04 pm

DIN

பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயா்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே வியாழக்கிழமை காலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு திருச்சி மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவா் இமாம் ஹஸ்ஸான் தலைமை வகித்தாா்.

கரோனா தொற்று காரணமாக நாட்டின் வா்த்தகம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு என அனைத்தும் மோசமான நிலையிலும், விலைவாசி உயா்வுக்கு காரணமான பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதை மத்திய பாஜக அரசு வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்கிறது.

நெருக்கடியான கட்டத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் வகையில் விலைவாசி உயா்வுக்கு வித்திடப்பட்டுள்ளது.

எனவே, பெட்ரோல் டீசல் விலையை திரும்ப பெற வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளா் நியமத்துல்லா, மாவட்ட செயலாளா் முபாரக் அலி, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஏா்போா்ட் மஜித், தளபதி அப்பாஸ், ஐமால் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.