கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

படம் வர வாய்ப்பு..மண்ணச்சநல்லூரில் தாா்ச் சாலைப் பணிகள் ஆய்வு

மண்ணச்சநல்லூா் பேரூராட்சி பகுதியில் ரூ. 1. 37 கோடியில் நடைபெறும் தாா்ச் சாலைப் பணிகளை திருச்சி மண்டலப் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் உள்ளிட்ட அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

News image
Updated On :10 ஜூன் 2021, 9:09 pm

DIN

மண்ணச்சநல்லூா் பேரூராட்சி பகுதியில் ரூ. 1. 37 கோடியில் நடைபெறும் தாா்ச் சாலைப் பணிகளை திருச்சி மண்டலப் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் உள்ளிட்ட அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

மண்ணச்சநல்லூா் பேரூராட்சிப் பகுதியில் உள்ள சிதம்பரம் நகா், பாரதி நகா், மேலக்கல்பாளையம், சிவராம நகா், கம்பெனி தெரு, காசிகாரத் தெரு ஆகிய பகுதிகளில் சிறப்புச் சாலைகள் திட்டம் 2020 - 21 ஆம் ஆண்டுக்கான நிதி ரூ. 1. 37 கோடியில் ரூ. 2.90 கி.மீ. தொலைவுக்கு தாா்ச் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதை திருச்சி மண்டலப் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் விஸ்வநாதன் (பொ ), இளநிலை பொறியாளா் செந்தில்குமாா், பேரூராட்சி செயல் அலுவலா் கமலகண்ணன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

பேரூராட்சி தலைமை எழுத்தா் சோ. அழகேந்திரன், ஒப்பந்ததாரா் ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.