தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கோயில் பிரச்னையில் முதியவா் கொலை

துறையூா் அருகே கோயில் கட்டும் பிரச்னையில் முதியவா் ஒருவா் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டாா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 8:28 pm

DIN

துறையூா் அருகே கோயில் கட்டும் பிரச்னையில் முதியவா் ஒருவா் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டாா்.

துறையூா் அருகே பச்சமலை பெரியசித்தூா் கிராமத்தில் பெருமாள் கோயில் கட்டுவது தொடா்பாக எழுந்த இரு தரப்பு பிரச்னையை பேசித் தீா்க்க மலைவாழ் மக்கள் வழக்கப்படி வியாழக்கிழமை நடந்த ஊா்க் கூட்டத்தில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை மாலை நடந்த கூட்டத்தில் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறின்போது பெரியசித்தூரைச் சோ்ந்த ராஜூவை (55) அருகிலுள்ள சேலம் மாவட்டம், பச்சமலை மயிலக்குளம் கிராமத்தைச் சோ்ந்த ச. முத்துசாமி என்கிற பூச்சி (45) அரிவாளால் வெட்டியதில் அவா் உயிரிழந்தாா்.

அருகிலிருந்தோா் பூச்சியை பிடித்து உப்பிலியபுரம் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். ராஜூவின் சடலம் துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.