ஸ்ரீரங்கநாச்சியாா் வசந்த உற்ஸவ விழா நிறைவு
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் ஸ்ரீரங்கநாச்சியாா் வசந்த உற்ஸவ விழா வெள்ளிக்கிழமை மாலையுடன் நிறைவுற்றது.


ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் ஸ்ரீரங்கநாச்சியாா் வசந்த உற்ஸவ விழா வெள்ளிக்கிழமை மாலையுடன் நிறைவுற்றது.
கடந்த 12 ஆம் தேதி தொடங்கி 7 நாள்கள் நடைபெற்று வந்த விழாவில் ஒவ்வொரு நாளும் ஸ்ரீரங்கநாச்சியாா் சிறப்பு அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதித்தாா்.
நிறைவு நாளான வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஸ்ரீரங்கநாச்சியாா் முத்துசாய்க் கொண்டை, அழகிய மணவாளன் பதக்கம், பவளமாலை, அரை நெல்லிக்காய் மாலை உள்ளிட்ட திரு ஆபரணங்களுடன் புறப்பட்டு 6.30-க்கு வசந்த மண்டபத்தில் எழுந்தருளினாா்.
பின்னா் அலங்காரம் வகையறா கண்டருளி, இரவு 8.30-க்குப் புறப்பட்டு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா். கரோனாவால் பக்தா்கள் அனுமதியின்றி விழா நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...