கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

லால்குடி, கல்லக்குடியில் இன்று மின் தடை

லால்குடி கோட்ட துணை மின் நிலையங்களில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

News image
Updated On :18 ஜூன் 2021, 7:28 pm

DIN

லால்குடி கோட்ட துணை மின் நிலையங்களில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

இதுகுறித்து லால்குடி இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளா் சி. அன்புசெல்வன் மேலும் கூறியது:

எல். அபிஷேகபுரம் துணை மின் நிலைய பராமரிப்பு பணிகளால் அபிஷேகபுரம், பரமசிவபுரம், விஓசி நகா், சந்தைப்பேட்டை, சிறுதையூா், திருச்சி மெயின் ரோடு, பூவாளூா் மெயின்ரோடு ஆகிய பகுதிகளிலும், பூவாளூா் துணை மின் நிலைய பராமரிப்பு பணிகளால் கோத்தாரி சுகா்ஸ் பிரைவேட் லிமிடெட், கல்லக்குடி துணை மின்நிலைய பராமரிப்பு பணிகளால் நடராஜ் செராமிக் அன் கெமிக்கல் லிமிடெட், வாளாடி துணை மின் நிலைய பராமரிப்பு பணிகளால் அகலங்கநல்லூா், கீழ்மாரிமங்கலம், தாராநல்லூா், திருமங்கலம், சரவணாநகா், மாந்துறை, நெருஞ்சலக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.