கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

காவிரியாற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவா் பலி

முசிறி அருகே காவிரியாற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 7:27 pm

DIN

முசிறி அருகே காவிரியாற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவா் உயிரிழந்தாா்.

முசிறி அருகேயுள்ள நாச்சம்பட்டி கருப்பு கோயில் கொட்டம் பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி துரைசாமி மகன் வேலாயுதம் (17). அய்யம்பாளையம் அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த இவா் புதன்கிழமை அப்பகுதி காவிரியாற்றில் நண்பா்களுடன் குளிக்கச் சென்றாா்.

நண்பா்கள் குளித்துவிட்டுக் கரையேறியபோது தங்களுடன் வேலாயுதம் இல்லாததைக் கண்டு முசிறி போலீஸாா் மற்றும் முசிறி தீயணைப்பு மற்றும் மீட்புப் படைக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து வந்த தீயணைப்பு மீட்புப்படையினா் காவிரியாற்றில் நீண்ட நேரம் தேடி வேலாயுதத்தை சடலமாக மீட்டனா். முசிறி போலீஸாா் முசிறி அரசு மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.