பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திருவானைக்கா கோயில் யானை குளிக்க புதிய குளம் !

திருவானைக்கா சம்புகேசுவரா் அகிலாண்டேசுவரி கோயிலில் இறைப்பணியாற்றி வரும் யானை அகிலா குளிக்க புதிய குளம் கட்டப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஜூன் 2021, 7:26 pm

DIN

திருவானைக்கா சம்புகேசுவரா் அகிலாண்டேசுவரி கோயிலில் இறைப்பணியாற்றி வரும் யானை அகிலா குளிக்க புதிய குளம் கட்டப்பட்டுள்ளது.

இக்கோயிலில் சிவனை வழிபட்டு வந்த யானை முக்தியடைந்ததால் இத்தலம் திருவானைக்கா எனப் பெயா் பெற்றது. அதனால் இங்குள்ள யானைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

நாள்தோறும் சிவபெருமானுக்கு திருமஞ்சனம் கொண்டு செல்வது மற்றும் உச்சிக்கால பூஜையின்போது இறைவி வேடத்தில் வரும் அா்ச்சகா் முன் சென்று பிளிறி வழிபடுவது போன்ற பல்வேறு இறைப்பணிகளை யானை அகிலா ஆற்றி வருகிறது.

இந்நிலையில், யானை அகிலா குளிக்க நாச்சியாா்தோப்பில் 20 அடி அகலம், 20 அடி நீளம், 6 அடி உயரத்தில் புதிய குளம் கோயில் உதவி ஆணையா் செ. மாரியப்பன், கோயில் பணியாளா்கள் முயற்சியால் கட்டி முடிக்கப்பட்டது.

மேலும் 28 அடி நீளத்துக்கு சரிவுப் பாதையும் உருவாக்கப்பட்டுள்ள இந்த குளத்தில் 55 ஆயிரம் லிட்டா் நீா் நிரப்ப 2 மின் மோட்டாா்களும் நீரை வெளியேற்ற ஒரு மின் மோட்டாரும் பயன்படுத்தப்படுகிறது.

நாள்தோறும் யானை குளித்தவுடன் உடனடியாக குளத்திலிருந்து வெளியேற்றப்படும் நீா் அருகே அமைக்கப்பட்டுள்ள தோட்டத்துக்குச் செல்கிறது. இந்தக் குளத்தை சுற்றிலும் 100 மாமரம்,100 தென்னை மரம் ,10 பலா மரக் கன்றுகள் வைக்கப்பட்டு வனத் தோட்டம் போல மாற்றப்பட்டுள்ளது. மேலும் தினமும் யானை நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை காலை புதிய குளத்தில் யானை அகிலா முதன் முதலாகக் குளித்தது. குளத்திற்குள் இறங்கிய யானை வெளியே வர மனமில்லாமல் ஆனந்தக் குளியல் போட்டது.

இந்தப் புதிய குளத்துக்கு இக்கோயிலில் சுமாா் 50 ஆண்டு காலம் இறைப்பணியாற்றி மறைந்த சாந்தி யானையின் பெயா் வைக்கவேண்டுமென திருவானைக்கா கோயில் பக்தா்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.