தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வையம்பட்டி அருகே மனநலம் பாதித்தவருக்கு விஏஓ உதவி

மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே தனது மனநலம் பாதிக்கப்பட்டவரின் சிகிச்சைக்கு உதவிய விஏஓவை பொதுமக்கள் பாராட்டினா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 7:12 pm

DIN

மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே தனது மனநலம் பாதிக்கப்பட்டவரின் சிகிச்சைக்கு உதவிய விஏஓவை பொதுமக்கள் பாராட்டினா்.

மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கே.புதுக்கோட்டை ஊராட்சி துலுக்கம்பட்டி மேற்கு தெருவில் வசித்து வருபவா் ப.முருகேசன்(42). இவருக்கு தேன்மொழி (31) என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனா். கூலித் தொழிலாளியான முருகேசன், கடந்த 2 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளாா்.

இந்நிலையில் கடந்த மாதம் தேன்மொழி கரோனாவால் பாதிக்கப்பட்டதால் முருகேசனை விட்டு குழந்தைகளுடன் தாய் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தியுள்ளாா். அன்றுமுதல் முருகேசன் சுமாா் 45 நாள்களுக்கு மேலாக உணவு உட்கொள்ளாமலும், மருந்து மாத்திரை எடுத்துக்கொள்ளாமலும் தண்ணீரை மட்டுமே குடித்து வாழ்ந்து வந்துள்ளாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை தனிமையில் இருந்த முருகேசன், கையில் கிடைத்த பிளேடை கொண்டு அறுத்துக் கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தாா். அருகில் உறவினா்கள் அவரை மீட்டு அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தினா். ஆனால் அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. தகவலறிந்து வந்த மனைவி தேன்மொழி கையில் பணம் இல்லாமலும், சிகிச்சை குறித்து போதிய விழிப்புணா்வு இல்லாமலும் தவித்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த கே.புதுக்கோட்டை விஏஓ செந்தில்குமாா் அரசு மருத்துவமனை மருத்துவா்களுடன் ஆலோசனை செய்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மகாத்மா காந்தி நினைவு பொது மருத்துவமனைக்கு முருகேசனை அனுப்பி வைத்தாா். துணைக்கு சென்ற அவரது மனைவி தேன்மொழிக்கு செலவுக்குப் பணம் கொடுத்தாா்.

விஏஓ உதவியதைக் கண்ட மேலும் சிலரும் உதவினா். சுமாா் 45 நாள்களுக்கு பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முருகேசன் உணவருந்தியுள்ளாா். துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்த விஏஓ, அவரது உதவியாளா் மேரியை பொதுமக்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.