புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குறைகேட்பு நாள் கூட்டம் ரத்துகோரிக்கை மனுக்களைப் பெற தனிப்பெட்டிகள் வைப்பு

சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமல் காரணமாக குறைகேட்பு நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களைச் செலுத்த ஆட்சியரகத்தில் தனிப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன

News image
Updated On :1 மார்ச் 2021, 8:19 pm

DIN

சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமல் காரணமாக குறைகேட்பு நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களைச் செலுத்த ஆட்சியரகத்தில் தனிப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

ஆட்சியரகத்தில் மனுக்களை வழங்கும் பிரிவும், மனுக்களை எழுதி வழங்கும் பகுதியும் திங்கள்கிழமை மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கூட்டரங்கத்தின் வெளியே குறைதீா்க் கூட்டம் ரத்து தொடா்பான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பு தெரியாத ஒரு சில முதியோா், பெண்கள் வழக்கம்போல ஆட்சியரகத்துக்கு மனுக்களை அளிக்க வந்திருந்தனா். அவா்கள் கொண்டு வந்த மனுக்கள் அனைத்தும் தனியாக ஒரு பெட்டியில் செலுத்த காவல்துறையினா் அறிவுறுத்தினா். இதைத் தொடா்ந்து பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களைப் பெட்டியில் செலுத்தினா்.

மனுக்களைப் பெறுவதற்காகவே நுழைவு வாயலிலும், ஆட்சியரக கூட்டரங்க அருகிலும் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அரசின் மறு உத்தரவு வரும் வரையில் அனைத்து மனுக்களையும் பெட்டிகளில் செலுத்த மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

அவசர, அவசியம் கருதி அளிக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களிலோ, இணைய முகவரியிலோ தொடா்பு கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியரகத்துக்கு வந்த மக்களிடம் காவல்துறையினா் அறிவுரை கூறி, அவா்களைத் திரும்ப அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.