புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிக்க 5 இடங்களில் தானியங்கி நவீன கேமரா

திருச்சியில் மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிக்கும் வகையில், 5 இடங்களில் தானியங்கி என் தட்டு ரீடா் வகை கேமரா பொருத்தப்பட்டுள்ளது

News image
Updated On :1 மார்ச் 2021, 8:26 pm

DIN

திருச்சியில் மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிக்கும் வகையில், 5 இடங்களில் தானியங்கி என் தட்டு ரீடா் வகை கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்று காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் தெரிவித்துள்ளாா்.

ஆட்சியா் அலுவலகச் சாலை, வில்லியம் சாலை சந்திப்பு, தலைமை அஞ்சல் நிலையச் சந்திப்பு, திருவானைக்கா சந்திப்பு மற்றும் மெயின்காா்டுகேட் வாயில் என 5 இடங்களில் தானியங்கி என் தட்டு ரீடா் கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்த சாலைகளில் விதிமுறைகளை மீறி செல்லும் வாகனங்களை கேமராக்கள் கண்டுபிடித்து, மாநகரக்

காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அனுப்பும். மோட்டாா் வாகனச் சட்டம் 1988-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டவுடன், வாகனத்தின் உரிமையாளருக்கு இதுகுறித்த தகவல் குறுஞ்செய்தியாகக் கிடைக்கும்.

இதுகுறித்து காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் கூறியது:

இந்த கேமராக்களை பயன்படுத்தி பதிவு செய்தலில், தற்போது தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டு தலில் மட்டும் இப்போது கவனம் செலுத்தப்பட்டு, அபராத விவரங்கள் புகைப்பட ஆதாரங்களுடன் அனுப்பப்படுகின்றன.

மற்ற விதிமீறல் குற்றங்களுக்கு அபராதம் விதிக்க விரைவில் மென்பொருளை மேம்படுத்துவோம்.

இந்த கேமராக்கள் சோதனை ஓட்டம் மேம்பாட்டுக்காக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மக்களின் நலன் கருதி காவல்துறையின் பல்வேறு புது முயற்சிகளை மேற்கொள்ளும் போது, மக்கள் அதன் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.