தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை குறைக்க வலியுறுத்தி மனு

பேரவைத் தோ்தல் பணிகள் முடிவடையும் வரை தமிழத்திலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கும் நேரத்தை இரவு 8 ஆக குறைக்க வேண்டும்

News image
Updated On :1 மார்ச் 2021, 8:26 pm

DIN

பேரவைத் தோ்தல் பணிகள் முடிவடையும் வரை தமிழத்திலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கும் நேரத்தை இரவு 8 ஆக குறைக்க வேண்டும் எனக் கோரி மாநிலத் தலைமைத் தோ்தல் அலுவலா், தமிழக அரசின் முதன்மைச் செயலருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் பணியாளா் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ஜி.வி. ராஜா, மாநிலத் தலைவா் ஏ.இ. பாலுசாமி ஆகியோா் அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பது:

சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகின்றன. தோ்தல் பரப்புரை தினமும் இரவு 10 மணிக்கு நிறைவு பெறுகிறது. அதே நேரத்தில் மதுபானக் கடைகளும் மூடப்படுகின்றன.

அரசியல் கட்சியில் களப்பணியாற்றுவோா் அதே நேரத்தில் மதுக்கடைக்கு வந்து மதுபானங்களை கேட்டு நெருக்கடி தரக் கூடும். டாஸ்மாக் விற்பனையை இறுதி செய்து, கடைகளை மூடி உள்ளே கணக்கு சரிபாா்க்கும் பணியில் ஈடுபடும் ஊழியா்களுக்கும், மதுபானம் கேட்டு வரும் கட்சியினருக்கும் இடையே தேவையற்ற வாக்குவாதம் ஏற்படக் கூடும்.

எனவே, மதுக்கடைகள் இயங்கும் நேரத்தை நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என்பதற்கு மாற்றாக, நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றம் செய்ய வேண்டும்.

மதுக்கடைகள் இயங்கும் நேரத்தை 2 மணி நேரம் குறைப்பதால் பெரிதும் விற்பனை பாதிக்காது. மேலும், சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் எழாது. தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் காலத்தில்தான் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் பேரவைத் தோ்தலும் நடைபெறுகிறது.

அங்கு மதுக் கடைகளின் விற்பனை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதுபோல,தமிழகத்திலும் மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை குறைத்து உத்தரவிட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.