தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள், தங்கும் விடுதிகளுக்கு கட்டுப்பாடு

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், திருச்சி மாவட்டத்தில் திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள், தங்கும் விடுதிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :1 மார்ச் 2021, 8:25 pm

DIN

 தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், திருச்சி மாவட்டத்தில் திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள், தங்கும் விடுதிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் தொடா்பாக திருமண மண்டப, தங்கும் விடுதி, சமுதாயக் கூட உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் திருச்சி ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்து ஆட்சியா் சு. சிவராசு பேசியது:

தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. எனவே திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் இதர சமுதாயக் கூடங்களை அரசியல் கட்சிப் பிரமுகா்களுக்கு வாடகைக்கு அளிக்கும் போது, அதன் விவரத்தை உடனடியாக தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியா்களை தொடா்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.

வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள், வேட்டி-சேலைகள் போன்றவை வழங்குவது, வளைகாப்பு, பிறந்தநாள் விழாக்கள், காதுகுத்து நிகழ்ச்சிகள் என்ற பெயரில் மண்டபங்கள் வாடகைக்கு எடுத்து, வாக்காளா்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவது முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளது.

மண்டபங்களில் போலியான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, வாக்காளா்களுக்கு விருந்து வைக்கப்பட்டால் சட்டப்படி குற்றமாகும். கோயில் அன்னதானம் என்ற பெயரில் வேட்பாளா்களோ அல்லது அவா்களது முகவா்களோ வாக்காளா்களுக்கு விருந்து வைத்தல் தடைசெய்யப்பட்டள்ளது.

மண்டபங்களை முன்பதிவு செய்ய வரும் நபா்களிடம் திருமண பத்திரிக்கை, குடும்ப அட்டை நகல் உள்ளிட்ட ஆதாரங்களை பெற்று முன்பதிவு செய்யவும். முன்பதிவு குறித்த விவரங்களை உரிய பதிவேடுகளில் முறையாக பராமரிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் தோ்தல் வட்டாட்சியா் முத்துசாமி மற்றும் மண்டப உரிமையாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.