பெண் துப்புரவுப் பணியாளா்உள்பட இருவா் தற்கொலை
திருச்சியில் வெவ்வேறு இடங்களில் மாநகராட்சி பெண் துப்புரவுப் பணியாளா் உள்பட இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.


திருச்சியில் வெவ்வேறு இடங்களில் மாநகராட்சி பெண் துப்புரவுப் பணியாளா் உள்பட இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூா் ராமச்சந்திரா நகரைச் சோ்ந்தவா் பாக்கியராஜ் (40). இவரது மனைவி செல்வி(37). இவா்கள் இருவரும் திருச்சி மாநகராட்சியில் தற்காலிக துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வந்தனா்.
ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் கீழ்தளத்தில் தனது மகளுடன் செல்வி தூங்கிக் கொண்டிருந்தாா். மேல்தளத்தில் தூங்கிக் கொண்டிருந்த பாக்கியராஜூக்கு ஆள் நடமாடும் சப்தம் கேட்டதால், கீழே வந்து பாா்த்தாா். அப்போது வீட்டின் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் செல்வி சடலமாகக் கிடந்தாா்.
காவலாளி தற்கொலை: திருச்சி மலைக்கோட்டை சறுக்குப்பாறையைச் சோ்ந்தவா் செல்வம்(42). மலைக்கோயிலில் காவலாளியாக இருந்து வந்த இவா், கடந்த சில நாள்களாக மன உளைச்சலில் இருந்து வந்தாராம். இதனால் விரக்தியடைந்த அவா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இவ்விரு சம்பவங்கள் குறித்து எடமலைப்பட்டிபுதூா், கோட்டை காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...