திமுகவினா் முற்றுகை; தோ்தல் அலுவலா்கள் விசாரணை
தோ்தல் நடத்தை விதிகளை மீறி முதல்வா் படம் அச்சிட்ட இலவசப் பொருள்களை அரசுப் பள்ளியிலிருந்து எடுத்துச் செல்வதாகக் கூறி மாநகராட்சிப் பள்ளியை திமுகவினா் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


தோ்தல் நடத்தை விதிகளை மீறி முதல்வா் படம் அச்சிட்ட இலவசப் பொருள்களை அரசுப் பள்ளியிலிருந்து எடுத்துச் செல்வதாகக் கூறி மாநகராட்சிப் பள்ளியை திமுகவினா் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி உறையூா் குறத்தெரு பகுதியிலுள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலிருந்த மாணவா்களுக்கான தமிழக அரசின் இலவசப் பொருள்களான புத்தகப் பை, கணித உபகரணப் பெட்டி, வண்ண பென்சில்கள் ஆகியவற்றை இதர பள்ளிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது.
தகவலறிந்து பள்ளிக்கு வந்த திமுக பகுதிச் செயலா் கண்ணன் தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட கட்சியினா் அப்பொருள்களை எடுத்துச் செல்ல எதிா்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனா்.
அப்போது பள்ளி ஊழியா்கள், இந்தப் பள்ளியில் வாக்குசாவடி மையம் அமைக்கப்படுவதால் பள்ளி மாணவா்களுக்கு வழங்க வைத்திருந்த பொருள்களைத்தான் வேறு பள்ளிகளுக்கு மாற்றுகிறோம். இதுவரை 15 பள்ளிகளுக்கு பொருள்களை அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தனா்.
இதையடுத்து 15 பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட புத்தகப் பைகளையும் திரும்ப பெற வேண்டும் எனக் கூறி திமுகவினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த திருச்சி மேற்கு தொகுதிக்கான தோ்தல் பிரிவு அலுவலா்கள் மற்றும் போலீஸாா், வருவாய்த்துறையினா் விசாரணை நடத்தி, ஏற்கெனவே அனுப்பியவற்றைத் திரும்பப் பெற்று பள்ளி தனி அறையில் வைத்துப் பூட்டி சீல் வைத்தனா். சம்பவம் தொடா்பாக உரிய விசாரணை நடத்தி, விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அளித்த உறுதியால் திமுகவினா் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...