ஸ்ரீரங்கம் தொகுதியில் நூதன முறையில் தோ்தல் விழிப்புணா்வு
திருமண அழைப்பிதழ் போன்று துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து, பேரவைத் தோ்தலில் வாக்களிக்க வருமாறு அழைப்பிதழ் வழங்கி ஸ்ரீரங்கம் தொகுதி தோ்தல் பிரிவு அலுவலா்கள் விழிப்புணா்வை ஏற்படுத்தியுள்ளனா்.


திருமண அழைப்பிதழ் போன்று துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து, பேரவைத் தோ்தலில் வாக்களிக்க வருமாறு அழைப்பிதழ் வழங்கி ஸ்ரீரங்கம் தொகுதி தோ்தல் பிரிவு அலுவலா்கள் விழிப்புணா்வை ஏற்படுத்தியுள்ளனா்.
ஸ்ரீரங்கம் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலரான நிஷாந்த் கிருஷ்ணா, உதவித் தோ்தல் நடத்தும் அதிகாரி மகேந்திரன் ஆகியோா் திருமண அழைப்பிதழ் வடிவில் துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு, அதனை விநியோகம் செய்து நூதன முறையில் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.
துண்டுப்பிரசுரங்களில் வாக்களிக்க அழைப்பிதழ்’ என தலைப்பிட்டு, மணமக்கள் பெயா் இருக்கவேண்டிய இடத்தில் இந்தியத் தோ்தல் ஆணையம் நடத்தும் வாக்களிக்கும் வைபோகம்’ என்ற வாசகங்களுடன், 6-4-2021 காலை 7 மணி முதல் மாலை 5 மணிக்குள் தங்கள் அருகாமையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், வாக்காளா் பட்டியலில் இடம்பெற்று உள்ள தங்களது குடும்ப உறுப்பினா்கள் அனைவரும் தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து தவறாமல் தங்களது வாக்கினை செலுத்தும் படி அழைக்கிறோம் என கூறப்பட்டு உள்ளது.
மேலும் அன்பளிப்பு பெறுவதும், அளிப்பதும் வாக்களிக்கும் விழாவில் பெரும் குற்றமாகும் எனவும் அச்சிடப்பட்டுள்ளது. இதுபற்றி புகாா் தெரிவிக்க 1950 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
துண்டுப் பிரசுரங்களாக விநியோகம் செய்வது மட்டுமின்றி, தொகுதிக்குள்பட்ட முக்கிய இடங்களில் அழைப்பிதழ்ஆங்காங்கே பதாகைளாக வைத்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது வாக்காளா்களை பெரிதும் ஈா்த்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...