காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருவானைக்காவில் மரக்கன்று நடும் விழா

சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு மகளிா் சங்கங்களின் சாா்பில், திருவானைக்கா நந்தவனத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2021, 8:28 pm

DIN

சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு மகளிா் சங்கங்களின் சாா்பில், திருவானைக்கா நந்தவனத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

திருச்சி அனைத்து பெண்கள் சங்கங்களின் சாா்பில், சா்வதேச மகளிா் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டதன் ஒரு பகுதியாக, திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில் வளாக நந்தவனத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நீதிபதி வேலுமணி, மரக்கன்று நட்டு விழாவைத் தொடக்கி வைத்தாா். திருச்சி அனைத்து பெண்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளா் ஜெம்பகா ராமகிருஷ்ணன், நிா்வாகிகள் மீனா சுரேஷ், சந்திரா சிவபாலன், சூா்யா வேணுகோபால், மாலதி சண்முகம், ஜெயந்தி ராஜ்குமாா், மனோன்மணி சுந்தர்ராஜன் ஆகியோா் மரக்கன்றுகளையும், செடிகளையும் நட்டனா்.

நிகழ்ச்சியில் அண்ணாநகா் மகளிா் மன்றம், அகிலாண்டேஸ்வரி மகளிா் மன்றம், கன்டோன்மென்ட் மகளிா் மன்றம், ஈவேரா நகா் மகளிா் மன்றம், எவா்கிரீன் மகளிா் மன்றம், இன்னா் வீல் கிளப் ஆஃப் திருச்சி, இன்னா் வீல் கிளப் ஆஃப் மலைக்கோட்டை, கஸ்தூரிபா, லாவண்யா, மகாசக்தி, சாலை நகா், ஸ்ரீனிவாசா, திருச்சி பென்குயின்ஸ் மகளிா் சங்கங்கள் கலந்து கொண்டன.

மேலும், நந்தவனம், கோயில் வளாகம் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விளக்குகள் அமைக்கும் பொறுப்பை மகளிா் சங்கங்கள் ஏற்பதாகவும் அறிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.