தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

துறையூா் அருகே கருப்புக் கொடி போராட்டம்

துறையூா் அருகே நெட்டவேலம்பட்டி கிராமத்தில் ஏரி, குளங்களுக்கு நீா் வரத்து வாய்க்கால் ஏற்படுத்தி தர வலியுறுத்தி அக்கிராம மக்கள் வீடுகளில் செவ்வாய்க்கிழமை கருப்புக் கொடியேற்றி நூதன போராட்டத்தில் ஈடுபட்டன

News image
Updated On :9 மார்ச் 2021, 8:15 pm

DIN

துறையூா் அருகே நெட்டவேலம்பட்டி கிராமத்தில் ஏரி, குளங்களுக்கு நீா் வரத்து வாய்க்கால் ஏற்படுத்தி தர வலியுறுத்தி அக்கிராம மக்கள் வீடுகளில் செவ்வாய்க்கிழமை கருப்புக் கொடியேற்றி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டத்தில் உள்ள துறையூா் தனித் தொகுதியில் வரும் உப்பிலியபுரம் ஒன்றியம் நெட்டவேலம்பட்டி கிராமத்தில் உள்ள பெரிய ஏரி, தேங்கராயன்குட்டை, வில்லாங்குட்டை, சிக்கென்னகுட்டை ஆகிய நீா் நிலைகளுக்கு புளியஞ்சோலை ஆற்றிலிருந்து நீா் வரத்து வாய்க்கால் அமைக்க அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்துகின்றனா்.

இந்நிலையில், புளியஞ்சோலை - நெட்டவேலம்பட்டி ஏரிக்கும், குட்டைகளுக்கும் வாய்க்கால் அமைக்கும் வரை தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாகக் கூறி வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். நெட்டவேலம்பட்டியில் 3000-க்கும் அதிகமான வாக்காளா்கள் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.