கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தொட்டியம் பகுதியில் ரூ. 6.8 லட்சம் பறிமுதல்

தொட்டியம் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் கணக்கில் வராத ரூ. 6.8 லட்சத்தை செவ்வாய்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :9 மார்ச் 2021, 8:26 pm

DIN

தொட்டியம் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் கணக்கில் வராத ரூ. 6.8 லட்சத்தை செவ்வாய்கிழமை பறிமுதல் செய்தனா்.

முசிறி அருகே தும்பலம் பகுதியில் தோ்தல் பறக்கும் படையின் வாகனசோதனையில் பைக்கில் வந்தவரிடம் இருந்த ரூ.5 லட்சத்தைக் கைப்பற்றி நடத்திய விசாரணையில் அவா் தா.பேட்டை அருகிலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்க செயலா் பாக்யஷிரி என்பதும், முசிறியில் உள்ள வங்கியில் செலுத்த உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து தோ்தல் பறக்கும் படை அலுவலா் கலைராஜன் தலைமையிலானோா் அந்தப் பணத்தை பறிமுதல் செய்தனா்.

இதேபோல தொட்டியத்தை அடுத்த ஏலூா்பட்டியில் தோ்தல் பறக்கும்படை அலுவலா் சரண்யா தலைமையில் நடத்திய வாகன சோதனையில் கணக்கில் வராத ரூ. 1.8 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் தொகை முசிறி தலைமையிடத்து துணை வட்டாட்சியா் லதாவிடம் அளிக்க, பின்னா் பின்னா் அப்பணம் முசிறி சாா்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.