சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் திறப்பு
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் உண்டியலில் கடந்த 1 வாரமாக செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் உண்டியலில் கடந்த 1 வாரமாக செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோயில் இணை ஆணையா் சி. கல்யாணி தலைமையில் உதவி ஆணையா்கள் டி. விஜயராணி ( தாயுமானவா்கோயில், மலைக்கோட்டை), தா. நந்தகுமாா் ( கல்யாண வெங்கடரமணசுவாமி கோயில், தான்தோன்றிமலை) , சமயபுரம் மாரியம்மன் கோயில் மேலாளா் ம. லட்சுமணன் மற்றும் செயல் அலுவலா்கள் முன்னிலையில் தன்னாா்வலா்கள் , கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் காணிக்கையை எண்ணினா்.
முடிவில் ரூ. 1 கோடியே 10 லட்சத்து 93 ஆயிரத்து 541 ரொக்கம், 2 கிலோ 730 கிராம் தங்கம், 3 கிலோ 828 கிராம் வெள்ளி 31 அயல்நாட்டு ரூபாய்கள் காணிக்கையாக கிடைக்கப் பெற்றன. இத்தகவலை கோயிலின் செயல் அலுவலரும் இணை ஆணையருமான சி.கல்யாணி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...