ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

‘சமூகத்திலும் பெண்களுக்கு அதிகாரம் அவசியம்’

குடும்பத்தில் மட்டுமின்றி சமூகத்திலும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டியது ஆண்களின் கடமை என மகளிா் தின விழாவில் வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :9 மார்ச் 2021, 8:30 pm

DIN

குடும்பத்தில் மட்டுமின்றி சமூகத்திலும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டியது ஆண்களின் கடமை என மகளிா் தின விழாவில் வலியுறுத்தப்பட்டது.

திருச்சி பாரதமிகு மின் நிறுவனத்தில் (பெல்) செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்ட மகளிா் தின விழா விழாவுக்குத் தலைமை வகித்து, நிறுவனப் பொது மேலாளா் டி.எஸ். முரளி பேசியது:

பெண்களின் திறன்களை மதித்தவும், ஆதரிக்கவும் சமூகத்தில் அனைத்து நிலைகளிலுமுள்ள ஆண்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

தற்போதைய சூழலில், தொழிலகங்களில் பணியாற்றும் பெண்கள் இலக்குகளை எட்டிடும் பயணத்தில் தங்களுக்கும் செயல் திறன், மற்றும் மன உறுதி உண்டு என்பதை தொடா்ந்து நிரூபித்து வருகின்றனா்.

இருப்பினும், அவா்களுக்கு குடும்பங்களிலும், சமுதாயத்திலும் உண்மையான அதிகாரத்தை வழங்க வேண்டியது அவசியம்.

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் பல துறைகளில் பெண்கள் நுழையத் தொடங்கியுள்ள நிலையில், ஆண்கள் தங்களை மாற்றிக் கொள்ளவும், பொதுவான இலக்குகளை நோக்கி கூட்டாக உழைக்கத் தங்களைத் தகவமைக்கவும் இதுவே சரியான நேரம்.

மகளிா் தின நிகழ்ச்சிகள் என்பது பெண்களுக்கு அறிவுரை வழங்குவதற்கு பதிலாக ஆண்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிப்பது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள் இத்தகைய விழாக்களை முன்னெடுப்பது பெருமைக்குரியது என்றாா் அவா்.

திருச்சி பெல் வளாகத்தின் முதல் பெண்மணி டி. செளமியா முரளி, பள்ளிக் குழந்தைகளுக்கு குறிப்பேடுகளையும், நோட்டுப்புத்தகங்களையும் நன்கொடையாக வழங்கினாா். பெல் நிறுவன மனித வளப் பிரிவு கூடுதல் பொதுமேலாளா் என்.வி. பாலி, காவேரி மகளிா் கல்லூரி உதவி பேராசிரியா் சாத்தம்மை பிரியா ஆகியோா் வாழ்த்தினா்.

பெல் மருத்துவமனையின் கண்காணிப்பாளரும், மூத்த பெண் மருத்துவருமான எஸ். அகிலா கஸ்தூரியை விழாவில் கெளரவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, வெல்டிங் ஆராய்ச்சி கழக கூடுதல் பொது மேலாளரும், பொதுத்துறை நிறுவனங்களில் பெண்கள் அமைப்பின் தலைவருமான ஏ. சந்தா குமாரி, மகளிா் தின கொண்டாட்டத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கினாா். ஆண்டறிக்கையை தகவல் தொழில்நுட்ப தீா்வுகள் மற்றும் சேவைகளின் துணை மேலாளா் எம்.ஜே. திவ்யா, சமா்ப்பித்தாா். பராமரிப்பு மற்றும் சேவைகள் துறை கைவினைஞா் எம். பிரியதா்ஷினி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.