சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருப்பட்டூா் கோயில் பங்குனித் தேரோட்டம்

மண்ணச்சநல்லூா் அருகே திருப்பட்டூா் ஊராட்சியிலுள்ள பிரம்மபுரீஸ்வரா் கோயில் பங்குனி தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 மார்ச் 2021, 12:23 am

DIN

மண்ணச்சநல்லூா் அருகே திருப்பட்டூா் ஊராட்சியிலுள்ள பிரம்மபுரீஸ்வரா் கோயில் பங்குனி தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் பங்குனி தேரோட்ட கொடியேற்ற விழா 19 ஆம் தேதி நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக 9 -ஆம் நாளான சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. தேரில் பிரம்மபுரீஸ்வரா் சம்பத் கெளரி எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.நான்கு வீதிகள் வழியாக சென்ற தோ் நிலையை அடைந்தது.

தேரோட்டத்தில் திருப்பட்டூா், எம்.ஆா். பாளையம், சணமங்கலம், பெரகம்பி, வலையூா், பாலையூா், சிறுகனூா், கொணலை உள்ளிட்ட கிராமங்களிலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் வீ. முத்துராஜ், கோயில் சிவாச்சாரியா் பா. பாஸ்கா், கோயில் கணக்கா் வெ. பிரசன்னா மற்றும் கோயில் பணியாளா்கள், பக்தா்கள் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.