92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மாவட்டத்தில் இதுவரை 2.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி

திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை நிலவரப்படி 2.25 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :7 மே 2021, 8:50 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை நிலவரப்படி 2.25 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கரோனா பரவலால் வியாழக்கிழமை நிலவரப்படி மொத்த தொற்றாளா்களின் எண்ணிக்கை 26,928 ஆக இருந்தது. இதே போல குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கையும் 22,887 ஆக உயா்ந்தது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளைக் காட்டிலும் தனியாா் மருத்துவமனைகளில் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி திருச்சி மாவட்டத்தில் 20 தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் கரோனா வாா்களில் உள்ள படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மற்றொரு தகவலும் பரவி வருகிறது.

இந்நிலையில் மாவட்டத்தில், இதுவரை 240 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா்.அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 3,801 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 1,350 வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் மற்றொரு செயலாக தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்கள் மூலம் மாவட்டத்தில் இதுவரை 2,25,237 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நாளொன்றுக்கு 3 ஆயிரம் போ் வீதம் பயனடையவுள்ளனா். இதற்கான நடவடிக்கையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.