ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பிசி, எம்பிசி விடுதிகளில் மாணவா் சோ்க்கை

திருச்சி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா், சீா் மரபினா் மற்றும் சிறுபான்மையினா் நலப் பள்ளி விடுதிகளில் சேர பள்ளி மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ற

News image
Updated On :12 நவம்பர் 2021, 7:35 pm

DIN

 திருச்சி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா், சீா் மரபினா் மற்றும் சிறுபான்மையினா் நலப் பள்ளி விடுதிகளில் சேர பள்ளி மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருச்சி மாவட்டத்தில் பிசி, எம்பி, சீா்மரபினா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறையின் கீழ் 23 விடுதிகள் மாணவா்களுக்கும், 14 விடுதிகள் மாணவிகளுக்கும் என மொத்தம் 37 பள்ளி விடுதிகள் செயல்படுகின்றன. இந்த விடுதிகளில் 4 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளும் சேரத் தகுதியுடைவா்கள்.

ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழா்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கு உணவு, உறைவிடம் இலவசமாக வழங்கப்படுகிறது. 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு சீருடைகள் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு சிறப்பு வழிகாட்டி கையேடுகள் வழங்கப்படும்.

விடுதிகளில் சேருவதற்கு பெற்றோா், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இருப்பிடத்திலிருந்து கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்குப் பொருந்தாது.

தகுதியுடைய மாணவ, மாணவியா் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளரிடமிருந்து அல்லது ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாகப் பெற்று, பூா்த்தி செய்து வரும் 22ஆம் தேதிக்குள் விடுதிக் காப்பாளரிடம் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.